டித்வா இழப்பீட்டு வழங்குவதில் முறைக்கேடு - அனர்த்த நிவாரண சேவை அதிகாரி பணியிடைநீக்கம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்குவதில் முறைக்கேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மாவட்டத்தின் அனர்த்த நிவாரண சேவை அதிகாரி தற்காலிகமாக பணியிடைநீக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வேறு ஒரு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )