இன்றைய ராசிபலன் (15.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 month ago
இன்றைய ராசிபலன் (15.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ரிஷபம்

கடன் தொல்லை நீங்கி தங்கள் வட்டாரத்தில் தங்களுக்கு மதிப்பு உயரும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது இடம் அல்லது புது வீடு வாங்குவீர்கள்.

மிதுனம்

தம்பதிகளிடையே அன்பு பலப்படும். பிரபலங்கள் உதவுவார்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை துரிதமாக முடித்துக் காட்டுவீர்கள். கடன் வாங்க வேண்டிய நிலை வந்தாலும் தாங்கள் அதனை சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் நல்ல லாபத்தை காணும்.

கடகம்

எதிர்பார்த்த ஒரு காரியம் நிறைவேறும். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். எல்லாம் மாறும்.

சிம்மம்

உத்யோகத்தில் அமைதி நிலவும். தங்கள் பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடடிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

துலாம்

அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். புதிய வாகனத்தை வாங்க பழைய வாகனத்தை விற்று விடுவீர்கள். வீட்டினை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். கூடுதல் அறை கட்டுவீர்கள். தம்பதிகள் ஒற்மை காப்பர். நினைத்த ஒரு காரியம் இன்று நடந்தேறும். உடல் நலம் மேம்படும்.

விருச்சிகம்

பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

தனுசு

அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். புதுச் சொத்துக்கள் வாங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். தங்க ஆபரணங்கள் அதிகம் வாங்குவீர்கள்.

மகரம்

பணம் கையில் சரளமாக புழங்கும். உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும்.

கும்பம்

அரசியல்வாதிகள் சுபிட்சம் பெறுவர். நண்பர்கள், உறவினர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.

மீனம்

மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4