சத்தீஸ்கரில் தர்பூசணி சாப்பிட்ட 15 வயது சிறுவன் மரணம் - மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதி
தர்பூசணி மற்றும் கோழிக்கறியை உட்கொண்ட 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார், அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் பதிவான இந்தச் சம்பவத்தை அடுத்து, உணவு விஷம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தர்பூசணி மாதிரியைப் பரிசோதிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாசுபடுதல், முறையற்ற சேமிப்பு அல்லது இரசாயன எச்சங்கள் ஆகியவை சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்றும், ஆய்வக அறிக்கைகள் கிடைத்தவுடன் தெளிவு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தைகள் தங்கள் கோடை விடுமுறையைத் தாய்மாமன் வீட்டில் கழித்து வந்ததாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும், சம்பவ இரவு உணவிற்கு கோழிக்கறி சாப்பிடுவதற்கு முன்பு, குழந்தைகள் தர்பூசணித் துண்டுகளைச் சாப்பிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகிலேஷ் தீவார் என அடையாளம் காணப்பட்ட 15 வயது சிறுவன், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
பூபேந்திர தீவார், ஹிமேஷ் தீவார் மற்றும் நான்கு வயதுடைய ஒரு சிறுவன் என மற்ற மூவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )