சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வு!

#SriLanka #Meeting #Development #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வு!

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மட் ஹனீபா அவர்களின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (12.05.2026) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரஜா சக்தி 2026 திட்டத்தின் 18 வேலைத்திட்டங்களுக்காக 71 மில்லியன், DCB - 2026 திட்டத்தின் 11 வேலைத்திட்டங்களுக்காக 4.205 மில்லியன், PRDP - 2027 திட்டத்தின் 06 வேலைத்திட்டங்களுக்காக 92.4 மில்லியன், PSDG- 2026 திட்டத்தின் 05 வேலைத்திட்டங்களுக்காக 3.9 மில்லியன் ரூபாய் பெருமதியான வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற வேலைத்திட்டதிக்காக 40 மில்லியன், நெல் உலர்த்தும் இயந்திர வசதியை நிறுவும் வேலைத்திட்டதிக்காக 32 மில்லியன், டிஜிட்டல் வீடியோ விளம்பரத் திரையை நிறுவுதல் வேலைத்திட்டதிக்காக 15 மில்லியன், பிராந்திய உள்ளூராட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளுக்கான வாகனம் மற்றும் உபகரணங்கள் சேவை மையத்தை நிறுவுதல்வேலைத் திட்டதிக்காக 15 மில்லியன் ரூபாய் அதைப்போல சேர்த்துட்டாங்களும் அங்கீகரிக்கப்பட்டன. 

மேலும் ஜனாதிபதி விளையாட்டுகளின் நவீனமயமாக்கல் திட்டதிக்காக 8.5 மில்லியன், சுவானியார் சிறிய பாலம் சீரமைப்பு திட்டதிக்காக 2 மில்லியன் ஒதுக்கிடப்பட்ட நிதிக்கான அனுமதிகள் சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி குழுவில் அனுமதி வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம்.தாஹிர், கே.கோடீஸ்வரன், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.முனாஸிர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.முகம்மட் அஸ்லம், பிரதம கணக்காளர் ஏ.எல்.மஹ்ரூப், கணக்காளர் எஸ்.எல்.சத்தார் மிர்ஸா மற்றும் திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!