மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

#SriLanka #Election #Province #Lanka4 #council #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நீண்டகால போராட்டங்களின் பின்னர் உருவான மாகாண சபை முறையை செயற்படுத்தி மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

2017ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்றும், முந்தைய அரசுகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய தேர்தல் முறையை எளிமைப்படுத்தி, 2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய மாகாண சபைச் சட்டத்தை இடைக்காலமாக தொடர்ந்தும் அமுலில் வைத்தே தேர்தலை நடத்த முடியும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!