அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு ஆயுதங்கள் கடத்திய மூவர் கைது

#Arrest #Canada #America #Weapons #Lanka4 #illegal #L4
Prasu
1 month ago
அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு ஆயுதங்கள் கடத்திய மூவர் கைது

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சுமார் 90 துப்பாக்கிகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு கனடியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 17 துப்பாக்கிகள் திருடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மே 7ம் திகதி நியூயார்க் மாநிலத்தில் நெடுஞ்சாலை அருகே வெள்ளை நிற வாகனம் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசாரால் நிறுத்தப்பட்டது.

வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தைச் சோதனை செய்தபோது, ஒரு கனமான சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட மூவரும் ஹாமில்டன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4