நாளை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கும் தவெக தலைவர் ஜோசப் விஜய்
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் 5 இடங்களும் இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 2 இடங்களும் விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன.
இதையடுத்து, தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார்.
இதனை தொடர்ந்து, கவர்னர் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு நாளை பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
விஜய் உடன் அருண்ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
(வீடியோ இங்கே )