தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு - விசிக தொண்டர்களின் பதிவால் அதிரும் தமிழகம்

#SriLanka #Vijay #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு - விசிக தொண்டர்களின் பதிவால் அதிரும் தமிழகம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதில் இறுதி நிமிடப் பரபரப்பை எதிர்கொண்டுள்ளது.

ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமான நிலையில், ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5 இடங்கள்) மற்றும் இடதுசாரி கட்சிகள் விஜய்க்குத் தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்த விஜய், மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பதாகக் கருதப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அந்தத் தகவலை மறுத்துள்ளதுடன் ஆதரவு வழங்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதனால், 2 இடங்களைக் கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிக முக்கியமாக மாறியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அதற்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்று வழங்கப்படவுள்ளது.

அக்கடிதம் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பின்னரே விஜய்யின் பெரும்பான்மை உறுதிப்படுத்தப்படும். எனினும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 இடங்கள் கிடைத்தாலும் விஜய்க்கு இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவைப்படுவதால், பதவியேற்பு வைபவம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடிக்கின்றது.

இந்த நிலையில் திருமாவளவனின் ஆதரவு முடிவிற்காகத் தமிழகமே காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் "இது திருமாவின் காலம்" என பதிவிட்டு வைரல் செய்து வருகின்றனர்.

"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு... இது திருமா காலம் - இனி உயர்வோம் மேலும் மேலும்!" என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு குறிப்பிட்டிருந்தமை, தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணையப் போவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இன்றைய தினத்திற்குள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

லங்கா4 (Lanka4) 

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4