இன்றைய ராசிபலன் (09.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news
Prasu
1 month ago
இன்றைய ராசிபலன் (09.05.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். நல்ல பொறுப்புகள் வந்தடையும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.

ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். திட்டமிட்டு வேலையை முடிப்பீர்கள். கவலை வேண்டாம். வாங்கிய கடனை விரைவில் அடைப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.பெண்களுக்கு இடுப்பு வலி நீங்கும்.

மிதுனம்

வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். தீர்க்கயாத்திரை மேற்கொண்டு மகான்கள், ஆன்மீகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். தம்பதிகளின் அன்புக்கு குறையிருக்காது. உடல் நலம் சிறக்கும்.

கடகம்

வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். வீட்டில் நிம்மதி கிடைக்கும். பணவரவில் தாமதம் இல்லை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் நன்றியுணர்வுடன் செயல்படுவார்கள். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது.

சிம்மம்

குடும்பத்தில் நீண்ட காலமாக நிறைவேற்ற வேண்டிய கடமையை இன்று முடித்துவிடுவீர்கள். விருந்து விழா என்று சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் தங்களின் பொருளாதாரத் தேவையை பூர்த்திசெய்வார்கள்.

கன்னி

கடனின் வட்டித்தொகையை அடைத்து விடுவீர்ள். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல செய்திகள் கிடைக்கும். நினைத்த வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் அதிகரிக்கும். தம்பதிகள் குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

துலாம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

விருச்சிகம்

சில்லரை வியாபாரம் லாபம் தரும். கோவில் சென்று வருவீர்கள். குறுகிய தூர பயணங்கள் நன்மையை தரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வங்கிக் கடன் உதவியும் கிட்டும். ஒரு சிலர் சில கிளைகளை துவங்குவர். நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும்.தேகம் பளிச்சிடும்.

தனுசு

நினைத்த விசயம் நடக்கும். புதிய முடிவினை எடுப்பீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். சுபகாரிய பேச்சு வார்த்தை சுபமாக முடியும். தள்ளிப் போன வெளியூர் பயணத்தைப் பற்றி இன்று முடிவெடுப்பீர்கள். பெண்கள் வெளி வட்டாரத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை.

மகரம்

வேலைச்சுமை இருக்கும். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டு. அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்

வீட்டில் மகிழ்ச்சித் தரும் நல்ல செய்திகள் கிடைக்கும். சில்லரை வியாபாரிகள் வியாபாரத்தில் ஒரு தொகையைப் பெறுவீர்கள். குடும்பத் தலைவிகள் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரபலங்களின் வீட்டில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும்.

மீனம்

கேட்ட கடன் தொகை கிடைக்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நம்பிக்கை பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். தேகம் பொலிவு பெறும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4