இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு எதிராக தற்கால சூழலுக்கு ஏற்ற கவிதை

#SriLanka #Tamil Nadu #people #Lanka4 #Vijay #poet #Politics
Prasu
1 month ago
இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு எதிராக தற்கால சூழலுக்கு ஏற்ற கவிதை

உறுமும் புலிக்கொடி பறந்த

கரிகாலன் தேசத்தில்

கோடம்பாக்கத்து சினிமாக்காரன்

கொடி பறக்குது

சேவல்கள் அல்ல

செல்கள் கூவி விடிந்த தேசத்தில்

தபால்காரனின் விசில்கள் கூவி

பட்டாசு வெடிகள் வெடிக்குது

நடிகர் வென்று விட்டாராம்

நமக்கு ஈழம் வந்து சேரப்போதாம்

இலட்சியத் தளபதிகளால் முடியாததை

இளையதளபதி வென்று தரப்போறாராம்

பாவம் தலைவர்

பதினாறு வயதில்

மோதிரத்தை விற்று

இன்றைய இளசுகள் போல

கைபேசி வாங்காமல்

கைத்துப்பாக்கி வாங்கி தொடங்கிய

விடுதலைப் பயணம் இது

செல்லக்கிளி அம்மான்

மாடு விற்ற காசை வைத்து

நாடு பிடிக்க புறப்பட்டார்

பல்கலைப் படிப்பை பாதியில் விட்டு

திலீபன் தின்னாது இறந்ததும்

உடலை ஆயுதமாக்கி

உயிராயுதமான மில்லர்

உலகத்தை மிரள வைத்ததுவும்

அங்கயற்கண்ணி மாலதிகள்

அஞ்சாது களமாடி

வாகை சூடியதும்

முறிந்து கால் போன போதும்

முடங்கிக் மூலையில் கிடக்காமல்

தமிழ்ச்செல்வன் தாண்டி தாண்டி

தடைகள் பல தாண்டி

தரணியெங்கும் போராட்டத்துக்கு

அரசியலில் வலுச் சேர்த்ததுவும்

காயம் பட்ட காலோடு

களமாடிய பால்ராஜும்

ஈழப் பெருங்கடலை

இரவு பகலாய் கட்டியாண்ட சூசையும்

அந்நியத் தலைவர்களை

வன்னிமண் தேடி

வரவைத்த வாய்மைமிக்க

அன்ரன் பாலசிங்கமும்

மலிவான பேரங்களுக்கு

மயங்கி விலைபோகாமல்

வீரத்தோடு நின்ற தலைவனும்

இலட்சியத் தலைவன் பின்னால் நின்ற ஈழத்துதமிழர்களும்

அல்லல் ஆயிரம் பட்டு

அல்லும் பகலும் அயராது

அன்னை மண்ணைக் காத்த

மாவீரர்களும் வாழ்ந்த

மண் இது இது 

சினிமாவுக்காக

கதாசிரியர்களான

பஞ்சு அருணாசலமோ

சுஜதாவோ எழுதிய 

கற்பனைக் கதையல்ல

கண் முன்னே

கண்ணீரும் இரத்தமும் தோய்ந்து

நடந்தேறிய

காவியக் கதையிது

ஆமைக்கறி கதை விடும் சீமானும்

ஆட்டம் போடும் சினிமாக்காரனும்

உன் கனவை நனவாக்கி

விடமாட்டார்கள் என்ற

உண்மை யதார்த்தத்தை நம்பு

வலிமை மிக்க புலிகளால் முடியாதது 

வாய்சொல் போலிகளால் 

என்றும் முடியாது

திரள்நிதியில் தின்று கொழுத்தவனும்

திரையொளியில் ஜொலித்தவனும்

நமக்கென்ற ஒரு நாடல்ல

ஒரு வீட்டைக் கூட கட்டித்தர 

இவர்களால் முடியாது

அவர்கள் வேறு

நாங்கள் வேறு

இதைப் புரிந்தால்

உனக்கும் உண்டு ஒரு வரலாறு

நன்றி: காந்தன் கவிதைகள்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4