சூரிச்சில் ஹந்தா வைரஸ் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என சுவிஸ் அரசு அறிவிப்பு!

#Switzerland #government #Lanka4 #Public #Swiss #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
சூரிச்சில் ஹந்தா வைரஸ் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என சுவிஸ் அரசு அறிவிப்பு!

தென் அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு ஏப்ரல் இறுதியில் திரும்பிய ஒரு நபர். அவர் தனது மனைவியுடன் "MV Hondius" என்ற சுற்றுலா கப்பலில் பயணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அறிகுறிகள் தென்பட்டவுடன் ஜூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் (USZ) அனுமதிக்கப்பட்டு, தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வைரஸ் பொதுவாக எலிகள் மூலம் பரவக்கூடியது. தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த 'ஆண்டீஸ்' வகை வைரஸ் மிக அரிதாக மனிதர்களுக்குள் பரவ வாய்ப்புள்ள போதிலும், அது நெருங்கிய தொடர்பின் மூலமே நிகழும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்றும், பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் ஸ்விட்சர்லாந்து மத்திய பொது சுகாதார அலுவலகம் (FOPH) உறுதியளித்துள்ளது.

அவருடன் பயணித்த அவரது மனைவிக்கு இதுவரை அறிகுறிகள் இல்லை என்றாலும், அவர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4