யாழ். பல்கலைப் பெயரில் பிழை: துணைவேந்தருக்கு பாராளுமன்ற உறுப்பினர் கடிதம்.

#SriLanka #Jaffna #Lanka4 #University #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
யாழ். பல்கலைப் பெயரில் பிழை: துணைவேந்தருக்கு பாராளுமன்ற உறுப்பினர் கடிதம்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தின் புதிய நுழைவாயிலில், பல்கலைக்கழகத்தின் பெயர் தவறாகப் பொறிக்கப்பட்டுள்ளமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறித்த நுழைவாயிலில் “யாழ்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை” என தமிழ் எழுத்து மரபுக்கு முரணாக, ஒரு 'பா' எழுத்து விடுபட்ட நிலையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர், இது “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை” என உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஒரு உயரிய கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் சரியான முறையில் பயன்படுத்தப்படுவது அதன் கௌரவத்திற்கு மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியின் எழுத்து மரபையும், கல்வி நிறுவனங்களின் அடையாளங்களையும் சிதைக்காமல் பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும். 

எனவே, இவ்விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, நுழைவாயிலில் உள்ள எழுத்துப் பிழையைச் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4