முதலமைச்சராகப் பதவியேற்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு!

#India #Election #Tamil Nadu #Governor #Lanka4 #ChiefMinister #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
முதலமைச்சராகப் பதவியேற்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

118 உறுப்பினர்களின் ஆதரவுப் பட்டியலைக் கோரி ஆளுநர் விடுத்த நிபந்தனையால் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த அரசியல் இழுபறிகள், தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளன.

108 இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும், பிற கட்சிகளின் ஆதரவு சமிக்ஞைகளைக் கருத்தில் கொண்டும், ஆட்சியமைப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை ஆளுநர் விஜயிடம் வழங்கியுள்ளார்.

ஆளுநரின் அழைப்பைத் தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

புதிய அரசியல் விடியல்: திராவிடக் கட்சிகளின் நீண்டகால ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி மாநிலம் நகர்வதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்கவுள்ள செய்தி, அவரது தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் அவருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4