"அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வெளியிட்ட செய்தி.

#India #SriLanka #Lanka4 #Vijay #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
"அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வெளியிட்ட செய்தி.

தமிழக அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, முதலமைச்சராகத் தெரிவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிறீதரன் எம்.பி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் வழங்கியுள்ள இந்த ஆணையை, தமிழக வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும் விஜய் பயன்படுத்துவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அரசியல் அபிலாசைகள் குறித்து விஜய் கொண்டுள்ள தெளிவான நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிய சிறீதரன், சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர புதிய தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் எனத் தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய்யை "அன்புச் சகோதரர்" எனக் குறிப்பிட்டு, அவரது புரட்சிகரமான புதிய பயணம் வெற்றியளிக்க இறைவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தின் வளர்ச்சிக்கும் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் உங்களது தலைமையிலான அரசு முன்னின்று உழைக்கும் என நம்புகிறோம்" - நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வாழ்த்துச் செய்தி.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4