பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் ஆரம்பம்!

#SriLanka #Parliament #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் ஆரம்பம்!

சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியுள்ளது.

இன்றைய அமர்வில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 4 ஒழுங்குமுறைகளுக்கு   ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  மீட்பு, புனர்வாழ்வு மற்றும் சொத்து சேத சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் நாளை நடைபெறவிருப்பதாகவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகளும், மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகளும் நாளை மறுநாள் ஒப்புதல் அளிக்கப்படவிருப்பதாகவும் பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. 

 பல தனிநபர் தீர்மானங்கள் வரும் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படவிருக்கின்றன. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4