தமிழக அரசியல் களத்தை மாற்றியமைத்த விஜய்! அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும் தமிழக வெற்றிக்கழகம்
இந்தியாவில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி அந்தக்கட்சிக்கு அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
அத்துடன் அந்தக்கட்சியின் தலைவரான ஜோசப் விஜய் தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மு.க.ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக்கழகம் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 47 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளது.
இந்தநிலையில் சாதாரணப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில், 108 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ள தமிழக வெற்றிக்கழகத்துக்கு இன்னும் 10 ஆசனங்கள் அவசியமாகின்றன.
இதனடிப்படையில் தற்போது தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழக வெற்றிக்கழகம், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.