முதலமைச்சராக முதல் தோல்வியை சந்தித்த மு.க.ஸ்டாலின்

#India #Tamil Nadu #Lanka4 #ChiefMinister #M.K.Stalin #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
முதலமைச்சராக முதல் தோல்வியை சந்தித்த மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 106 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. 

திமுக 67, அதிமுக 55 இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டிய மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விசில் சத்தம் ஓங்கி ஒலித்ததால் அவர் சரிவை சந்தித்தார். 

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அவரால் முன்னிலையை அடைய முடியவில்லை. இறுதியில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 67,530 வாக்குகள் பெற்றுள்ளார். 

4718 வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் சட்டசபை தேர்லில் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார். 

கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து தேர்தலிலும் வெற்றி (திமுக) பெற்று வந்தார். தற்போது முதல் முறையாக 2026 சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்துள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 1996 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். 

அதேபோல் முதலமைச்சராக இருந்து மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றுள்ளார். 

விஎஸ் பாபு 72,248 வாக்குகள் பெற்று கொளத்தூரில் வெற்றி பெற்றுள்ளார்.

* சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் முதல்முறையாக, 1984-ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

* 1989-ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

* 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

* திமுக அரசு 1991-ம் ஆண்டு தனது ஐந்தாண்டு பதவி காலத்தை முழுமையாக முடிப்பதற்குள் கலைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு, அதே சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் போட்டியிட்ட கே. ஏ. கிருஷ்ணசாமியிடம் தோல்வியடைந்தார்.

* மீண்டும் 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

* 2011-ம் ஆண்டு, மு. க. ஸ்டாலின் முதல் முறையாகத் தனது ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து கொளத்தூர் தொகுதிக்கு மாறி போட்டியிட்டார். 2011, 2016, 2021 கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

* முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் சட்டசபை தேர்லில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4