டெங்கு தாக்கத்தினால் 12 மரணங்கள் பதிவு!

#SriLanka #Dengue #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
டெங்கு தாக்கத்தினால் 12 மரணங்கள் பதிவு!

இந்த ஆண்டு இதுவரை 12 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட, டெங்கு தாக்கத்தினால்  12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. 

 சமூக மருத்துவர் டாக்டர் பிரஷில சமரவீர இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார். 

தொடர்ந்து தெரிவித்த அவர்,  கொழும்பு மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் இருந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். 

 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 25,846 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 இடைவிட்டு பெய்யும் மழையும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகளும் டெங்கு பரவல் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன என்றும், அவர் மேலும் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!