சிறைச்சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் : வைரலான காணொளியால் சர்ச்சை!

#SriLanka #Prison #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
சிறைச்சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்  : வைரலான காணொளியால் சர்ச்சை!

காலி சிறையில் கைதிகள் குழு ஒன்று நடத்திய பிறந்தநாள் விழா தொடர்பாக சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் காணொளி குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. 

 இச்சம்பவம் குறித்து காலி சிறையிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சிறை ஊடகப் பேச்சாளரும், சிறை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். 

 காலி சிறையின் 'சி' வார்டில் கேக் வெட்டும் பிறந்தநாள் விழாவைக் காட்டும் காணொளிக் காட்சி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

 குற்றவியல் கும்பலின் உறுப்பினர் எனக் கூறப்படும் அஹுங்கல்ல லோக்கு பட்டியின் நெருங்கிய கூட்டாளியான நமல் என்ற 'பொடியா'வின் பிறந்தநாள் இவ்வாறு கொண்டாடப்பட்டதாக சம்பந்தப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. 

 கைதிகள் குழு ஒன்று இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகைளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4