பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

#SriLanka #prices #government #Bus #Fuel #Lanka4 #Ticket #L4
Prasu
1 month ago
பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் பேருந்துத் தொழிலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், எரிபொருளின் தரம் குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4