கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் அதிகரிப்பு

#Canada #Lanka4 #L4 #residence #Permanent #permit
Prasu
1 month ago
கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கட்டணங்கள் அதிகரிப்பு

2026 ஏப்ரல் 30 நிலவரப்படி, எக்ஸ்பிரஸ் நுழைவு, மாகாண நாமினி திட்டங்கள் (PNPs) மற்றும் குடும்ப அனுசரணை திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகள் மற்றும் திட்டங்களிலும் கனடாவின் நிரந்தர குடியிருப்பு (PR) செயலாக்கக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பிரிவுகளில், தோராயமாக 4 முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் அதிகரித்துள்ளது. குடும்ப அனுசரணை கட்டணம் மட்டும், அதிகப்படியாக 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

நீங்கள் குடியிருப்பு அனுமதிக்கு ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்தாலும், The Right of Permanent Residence Fee (RPRF) கட்டணத்தை பிறகு செலுத்தலாம் என திட்டமிருப்பீர்கள் என்றால் இப்போது நீங்கள் புதிய கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும்.

நீங்கள் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்பே இணையவழியில் விண்ணப்பமும் செய்து, உங்கள் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அதை ஏற்றுக்கொண்டு விட்டது என்றால், நீங்கள் கூடுதலாக எதுவும் செய்யத்தேவையில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4