அக்கரைப்பற்றில் இரவு நேர உணவகங்களுக்கு 'சீல்': அதிரடி சோதனையில் சிக்கிய 28 இடங்கள்!

#SriLanka #Lanka4 #Raid #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
அக்கரைப்பற்றில் இரவு நேர உணவகங்களுக்கு 'சீல்': அதிரடி சோதனையில் சிக்கிய 28 இடங்கள்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் வழிகாட்டலில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரீ.ஜாரியா தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் காரைதீவு ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்த பாரிய சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

'டேஸ்ட்' கடைகள் உட்பட 28 இரவு நேர உணவகங்களின் சமையலறைகள் மற்றும் களஞ்சிய அறைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன.

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டன.

விதிகளை மிக மோசமான முறையில் மீறிய 07 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4