ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி கபடி அணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

#SriLanka #Lanka4 #beach #Asian_Games #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி கபடி அணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இலங்கை தேசிய கபடி அணிகள் நேற்று (29) நாடு திரும்பின.

வீரர்களை வரவேற்பதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் சார்பில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், அமைச்சர் சுனில் குமார கமகே வழிகாட்டலின் கீழ், எதிர்காலத்தில் இவ்வாறான சர்வதேச வெற்றிகளை நோக்கி வீரர்களை வழிநடத்த தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இப்போட்டித் தொடரில் மதுரிகா ஹன்சமாலி தலைமையிலான மகளிர் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.

வெற்றி பெற்ற அணிகளின் விபரம்:

மகளிர் அணி (வெள்ளிப் பதக்கம்):மதுரிகா ஹன்சமாலி (தலைவி) திலுக்சனா விமலநேந்திரன் ஹன்சிகா குமுதினி கஜேந்தினி ராசா பிரியவர்ணா ரசாதுரை ஷானிகா சுதர்ஷனி ஆடவர் அணி (வெண்கலப் பதக்கம்): மிலிந்த சதுரங்க சமின்த சந்துஷ்ட டிலான் சஞ்சய ருவன் சமரகோன் மொஹமட் அன்சாப் ஆபித் அகார்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4