தொடருந்து ஓட்டுநர்களின் அதிரடி முடிவு: வேகம் குறையும் புகையிரதங்கள்.

#SriLanka #Lanka4 #Train #Driver #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தொடருந்து ஓட்டுநர்களின் அதிரடி முடிவு: வேகம் குறையும் புகையிரதங்கள்.

தொடருந்து ஓட்டுநர்கள் இனிவரும் காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி தொடருந்துகளை இயக்கத் தீர்மானித்துள்ளதாக லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீவ குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தொடருந்து பயணங்களில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாத்துவ பகுதியில் தடம் புரண்ட 'சாகரிகா' தொடருந்து ஊழியர்கள் நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

"சாகரிகா தொடருந்து தடம் புரண்ட சம்பவத்திற்காக சாரதி உள்ளிட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் கடமைக்கு சமூகமளித்தாலும், நிர்வாகம் அவர்களைப் பணியில் அமர்த்துவதில்லை. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட தவறு அல்ல" எனத் தெரிவித்தார்.

தொடருந்தில் 80 சதவீதமானவற்றில் வேகத்தை அளவிடும் கருவிகள் சரியாக இயங்குவதில்லை எனவும், தொடருந்து தண்டவாளங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

"இதுவரை காலமும் ஓட்டுநர்கள் தமது வேலைப் பாதுகாப்பைப் பணயம் வைத்தே தொடருந்தை சரியான நேரத்திற்கு இயக்கினர். ஆனால் இனி அந்த அவதானத்தை எடுக்கப் போவதில்லை.

வேகக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதால் தொடருந்து தாமதமாகவே இயங்கும்" எனத் தெரிவித்தார். குறைபாடுகள் உள்ள தொடருந்துகளைத் திருத்திக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், அவ்வாறு செய்யத் தவறினால் அந்த தொடருந்துகளை இயக்குவதில் இருந்து விலக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4