இன்றைய ராசிபலன் (27.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4 #L4
Prasu
1 month ago
இன்றைய ராசிபலன் (27.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

வெளியூர் பயணம் அதிகரிக்கும். அதனால் லாபமும் கூடும். சென்ற இடமெல்லாம் செல்வாக்கு கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை.

ரிஷபம்

குடும்பத் தலைவிகளின் எண்ணம் ஈடேறும்.வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். இதுவரை பார்க்காத இடங்களுக்குச் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த ஒரு பெரிய தொகை வந்து சேரும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். உடம் நலம் சீராகும்.

மிதுனம்

பெண்கள் எதிர்பாலினரிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுபகாரியம் கைகூடும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.

கடகம்

உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத் தலைவிகள் யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும். உடல் நலம் பளிச்சிடும்.

சிம்மம்

வியாபாரிகளிடையே நிலவிய போட்டி பொறாமைகள் நீங்கும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் இயற்கை மருத்துவத்தால் சரியாகும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. வழக்கில் திருப்பம் ஏற்படும்.

கன்னி

பெண்கள் தாங்கள் விரும்பிய வேலைக்கு விண்ணப்பிப்பீர்கள். தங்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்துவிடும். பயணத்தின் போது கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சமையற்கலையில் ஆர்வம் கூடும். மாணவர்களின் மதிப்பெண் விகிதம் கூடும். அரசியலில் ஆர்வம் மிகும். பணப் புழக்கம் மிகும்.

துலாம்

கணவன்-மனைவிக்குள் அன்பு கூடும். அரசியலில் தங்களுக்கு நல்ஆதரவு கிடைக்கும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்யோகஸ்தர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர்.

விருச்சிகம்

உத்யோகத்தில் சில சலசலப்புகள் இருந்தாலும் மேலதிகாரிகள் தங்கள் பக்கம் நிற்பர். பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். சமூகம் மற்றும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

தனுசு

திருமணம் கைகூடும். ஏற்ற துணை அமைவார். பொது நலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும்.காதலர்களிடையே ஊடல் வந்து போகும்.

மகரம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

கும்பம்

பெண்கள் கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கில் தங்களுக்கு முக்கியமான திருப்பம் ஏற்படும். சகோதரர்களிடையே நிலப்பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண்பர்.

மீனம்

நவீன வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4