டெல்லி விமான நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்

#India #Flight #Airport #Accident #Delhi #Lanka4 #fire
Prasu
1 month ago
டெல்லி விமான நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்

டில்லி விமான நிலையத்தில் இருந்து சூரிச் நோக்கி புறப்பட்ட சுவிஸ் ஏர் விமானம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 232 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன் சுவிஸ் ஏர் விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு புறப்பட்டது.

விமானத்தின் இடதுபுறத்தில் புகை வெளியேறுவதையும் கண்டு, உடனடியாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.

உடனடியாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அவசரகால சறுக்குப்பாதைகள் வழியாக ஓடுதளத்திலேயே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும், 6 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4