இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்: மாற்றமின்றி தொடரும் விலை!

#SriLanka #prices #today #Lanka4 #Gold #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்: மாற்றமின்றி தொடரும் விலை!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,312 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் விலை ஏற்றத்தினால் கவலையடைந்திருந்த நுகர்வோர் மத்தியில், விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்கநிலை ஒரு சிறிய நிம்மதியையும், தங்கம் வாங்குவோரிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4