தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூல்களை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

#SriLanka #Protest #Kilinochchi #Lanka4 #books #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூல்களை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூலை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் அனைவரையும் ஒன்றிணையுமாறு உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளை தலைவர் அ.சத்தியானந்தன் இன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளராக விளங்கும் தீபச்செல்வன் அவரின் நூலினை பாதுகாப்பு அமைச்சும் சுங்கத்திணைக்களமும் சேர்ந்து தடுத்து வைத்திருக்கின்றது.

சிங்கள எழுத்தாளர்கள் மத்தியில் கூட இரின் ஆக்கங்கள் வாசிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு கூட செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு எழுத்தாளரின் நூலானது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சிங்கள எழுத்தாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் கலாசார அலுவல்கள் அமைச்சில் விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் விடுவிப்பது தொடர்பாக ஒரு தீர்வும் எட்டப்படவில்லை எனவே குறித்த நூலை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்கு மாறு அழைப்பு விடுத்திருந்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4