கிளிநொச்சி வைத்தியசாலை மகப்பேற்றுப் பிரிவில் நிர்வாகச் சிக்கல்: நோயாளர்கள் கடும் பாதிப்பு.

#SriLanka #Kilinochchi #Hospital #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
கிளிநொச்சி வைத்தியசாலை மகப்பேற்றுப் பிரிவில் நிர்வாகச் சிக்கல்: நோயாளர்கள் கடும் பாதிப்பு.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்றிற்காக வந்த கர்ப்பிணி பெண்ணை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நேற்று (22.04.2026) இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 

முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட குறித்த தாய், நீண்ட நேரம் அனுமதிக்கப்படாமல் காத்திருக்க நேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் தலையீட்டின் பின்னரே அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்தத் தாய் முன்பு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிகளில் மாதாந்திர கிளினிக் சிகிச்சை பெற்றிருந்ததாகவும், வெளி மாவட்டங்களில் சிகிச்சை பெற்றவர்களை இங்கு உடனடியாக அனுமதிக்க முடியாது என வைத்தியசாலை தரப்பில் கூறப்பட்டதாலேயே இத்தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோன்று முன்னரும், மகப்பேற்றிற்காக வந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சில தாய்மார்கள், பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வட மாகாணத்திற்கான பெண் நோயியல் பிரிவு கட்டப்பட்டிருந்தாலும், அதற்கான சேவைகள் இன்னும் முழுமையாக தொடங்கப்படவில்லை. 

இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்பதும் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4