உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணையில் கசிந்த திடுக்கிடும் தகவல்கள்

#SriLanka #Investigation #Easter Sunday Attack #pillaiyan
Soruban
1 month ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணையில் கசிந்த திடுக்கிடும் தகவல்கள்

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோரை மையப்படுத்தி புதிய தகவல்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை 3 சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்திப்புகளின் போது பேராசிரியர் குணரத்னவுடன் இரு பெண்கள் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பின்னர் நேரடியாக இலங்கை இராணுவத்தில் 'மேஜர் தரத்துக்கு நியமிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை பிள்ளையான் தான் இருந்த சிறை அறைக்கே அழைத்துச் சென்றதாக அந்தச் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்த போது எவராவது அருகில் சென்றால் பேச்சை மாற்றி விடுவார்கள் என்றும் சாட்சியாளரை கோடிட்டு, குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2015 முதல் 2021 வரை பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை,இந்த வழக்குடன் தொடர்புடைய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் குறித்து மேலதிக விசாரணை அறிக்கையொன்றையும் குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4