இன்றைய ராசிபலன் (24.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4 #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (24.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். காதல் விசயத்தில் அவசரம் வேண்டாம். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இளைஞர்கள் அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

ரிஷபம்

மார்கெட்டிங் பிரிவினருக்கு ஊக்கச் சம்பளம் பெறுவர். அலுவலகத்தில் பகை வேண்டாம் அனுசரியுங்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். யோகா கற்றுக் கொள்வீர்கள். கடன் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.

மிதுனம்

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் சேர்க்கை கூடும். காதலில் ஊடல் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கல்யாணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். வழக்கு சாதகமாக முடியும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம் 

மார்கெட்டிங் துறையினர் இலக்கை எட்டுவர். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது வாடிக்யைளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வெளியிடங்களில் உணவினை தவிர்ப்பது நல்லது. பிள்ளை நன்கு படிப்பர். 

சிம்மம் 

தன்னம்பிக்கை கூடும் நாள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிரிகள் மண்டியிடுவர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். காதல் ஜோடிகள் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். 

கன்னி 

அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நடந்தேறும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கீ தெளிவு பெறும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். உடல் நிலையை பரிசோதிப்பது நல்லது. 

துலாம்

வியாபாரத்தில் வேலையாட்களிடம் கவனம் தேவை. பந்தங்கள் அன்பு பாராட்டுவர். கடன் தொந்தரவு நீங்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் செயலில் உற்சாகம் வெளிப்படும். தேகம் பளிச்சிடும். 

விருச்சிகம் 

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. 

தனுசு 

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய சொகுசு வாகனம் வாங்குவீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் கூடும். திருமணம் செட்டாகும். வீட்டினை விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 

மகரம் 

நற்செய்தி வந்து சேரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தங்களுக்கு எதிரான வழக்கு தவிடுபடியாகும். நண்பர்களுக்கிடையே நெருக்கம் கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு உற்சாகமுடன் செல்வர்.

கும்பம் 

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உறவினர்கள் ஒத்துழைப்பர். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பங்கு சந்தையால் அனுகூலம் உண்டு. கணவன்- மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகி வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தேக பலம் உண்டாகும். 

மீனம் 

பணவரவு அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகள் லாபத்தை காண்பர். நீண்ட நாட்களாக இருந்த ஒற்றைத் தலைவலி நீங்கும். உத்தியோகத்தில் நன்மை உண்டு. நினைத்ததை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் உயர் படிப்பிற்கு திட்டமிடுவர். விற்பனைபிரதிகளுக்கு ஆர்டர்கள் குவியும். வீட்டில் சுப விசேஷம் நடந்தேறும். மாணவர்கள் நன்கு படிப்பர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!