ஒரு பீப்பாய் டீசல் 286 டொலருக்கு கொள்வனவு: எரிபொருள் கூட்டுத்தாபனம் ஒப்புதல்!
ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக HSBC வங்கியின் உலகளாவிய தலைமை நிர்வாக ஜோர்ஜ் எல்ஹெடெரி (Georges Elhedery) வெளியிட்ட தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹொங்கொங்கில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடொன்றில் உரையாற்றிய ஜோர்ஜ் எல்ஹெடெரி, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண மட்டத்தில் இருந்தபோதிலும், இலங்கையிலிருந்து ஒரு கொள்வனவாளர் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்காக 286 டொலர் எனும் பாரிய தொகையைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஊடக நிறுவனமொன்று லண்டனில் உள்ள HSBC தலைமையகத்தின் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, ஜோர்ஜ் எல்ஹெடெரி வெளியிட்ட கருத்தை, அதன் சிரேஷ்ட குழு முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், மசகு எண்ணை கொள்வனவில் கூடிய விலையாக 286 டொலர் பெறுமதியானது இலங்கையிலிருந்தே பதிவாகியுள்ளதாக அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலில், கனிப்பொருள் கூட்டுத்தாபனத் தலைவர் இந்தத் தகவலை ஒப்புக்கொண்டுள்ளமை எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
(வீடியோ இங்கே )