நாட்டில் இன்று வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்
நாட்டில் இன்று (17) பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டம் ஏற்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.
இதேவேளை நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பச் சுட்டெண் அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படக்கூடும். அத்துடன், இக்காலப்பகுதியில் தொடர்ந்து கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, அதிக நீர் பருக வேண்டும் என்பதுடன், வெளிக்கள நிகழ்வுகளை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )