யாழில் வன்முறைக் குழுவைச் சேர்ந்த மூவர் கைது!

#SriLanka #Jaffna #ARREST #Tamil People #ImportantNews #Violence #L4
Lakhi
5 months ago
யாழில் வன்முறைக் குழுவைச் சேர்ந்த மூவர் கைது!

யாழில் வன்முறைக் குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து இந்தக்கைக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் நேற்றைய தினம் (16-04-2026) வாள்களுடன் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்குத் தயாராகியுள்ளனர். இது குறித்துச் சுன்னாகம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், அந்தத் தாக்குதலை முறியடித்துக் குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று வாள்களுடன் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!