இணையத்தில் கசியவிட்ட முக்கிய நபர்கள் சிக்கினர்.

#India #Actor #Lanka4 #Vijay #Caught #online #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
இணையத்தில் கசியவிட்ட முக்கிய நபர்கள் சிக்கினர்.

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளங்களில் கசிந்த விவகாரம் தொடர்பாக, மூன்று முக்கிய சந்தேகநபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டிஜிட்டல் தடயங்கள் மற்றும் தீவிர விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேறொரு திரைப்படத்தின் காணொளி செம்மைப்படுத்துனராக பணியாற்றும் ஒருவர், 'ஜனநாயகன்' படத்தின் படத்தொகுப்புபணிகள் நடைபெற்ற கலையகத்துக்குள் அத்துமீறி நுழைந்து படத்தை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முழு நீளப் படம் கசிந்தமை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!