"கூட்டம் அல்ல இது குடும்பம்" என சமூக வலைதளங்களில் மோதல்.

#India #Lanka4 #Social Media #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
"கூட்டம் அல்ல இது குடும்பம்" என சமூக வலைதளங்களில் மோதல்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்படைந்துள்ள நிலையில், "கூட்டமெல்லாம் குடும்பமாகாது; அது கலைந்துவிடும்" என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சமீபகாலமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். 

இதைக் குறிப்பிட்டே கமல்ஹாசன் இவ்வாறு விமர்சித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது, எந்த அசம்பாவிதமும் இல்லை, விபத்தும் இல்லை. 

கூட்டம் நடத்துவதற்கு இது ஒரு முன்மாதரணம் என விஜய்யின் கூட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கூட்டமெல்லாம் குடும்பமாகாது, அது கலைந்துவிடும்" என எச்சரித்துள்ளார்.

மேலும், தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றியுள்ளதைச் சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், திராவிடக் குடும்பம் என்பது 75 ஆண்டுகளாகக் கட்டிக்காக்கப்பட்ட ஒரு குடும்பம். வழிதவறிப் போக வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் நேரடியாகப் போட்டியிடாமல், திமுக தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது. 

திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சி அவசியம் என்பதை வலியுறுத்தியே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், விஜய்யின் ஆதரவாளர்கள் இக்கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், "மக்களின் ஆதரவே உண்மையான பலம்" எனப் பதிலளித்து வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4