அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று முதல் கடமைகள் ஆரம்பம்.
#SriLanka
#government
#Employees
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 month ago
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழமைப் போன்று இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், பொதுமக்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த கல்வித் தவணையானது, ஜூலை 24 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இந்த அறிவித்தல் பொருந்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )