மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள்
#SriLanka
#Bus
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இன்று (14) வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கொழும்பிலிருந்து வெளியூர்களுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததனால் ரயில் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும் கொழும்பிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள், அஞ்சல் ரயில்கள் மற்றும் நகரங்களுக்கிடையிலான விரைவு ரயில் சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து இயங்குகின்றன என ரயில்வே திணைக்கள கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.