இன்றைய ராசிபலன் (13.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news
Prasu
2 months ago
இன்றைய ராசிபலன் (13.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன (வீடியோ இணைப்பு)

மேஷம்

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மருந்து வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம்.உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.

ரிஷபம்

அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. பணவரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் வெற்றிதரும். பண வரவு சீராக இருக்கும்.

மிதுனம்

அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. சமூக ஆர்வலர்கள் உணர்ச்சிவயப்பட வேண்டாம். வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கடகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

சிம்மம்

கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

கன்னி

தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். காதலர்களுக்கு பொறுமை அவசியம். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும்.

துலாம்

உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர். வியாபாரத்திற்கு வங்கிக் கடன் கிட்டும். வேலை தேடுபர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும்.

விருச்சிகம்

பழைய பாக்கிகள் வசூலாகும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்கள் மேலிடத்தின் மேல் கவனம் கொள்வது நல்லது. தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

தனுசு

நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.

மகரம்

பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. காதல் கைகூடும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். மாணவர்கள் வகுப்பறையில் வீண் அரட்டையை தவிருங்கள். விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள்.

கும்பம்

சொத்துப் பிரச்சினை தீரும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பங்களிப்பீர்கள். குடும்ப தலைவிகள் சேமித்த பணத்தில் பொன்நகை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

மீனம்

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொள்வர். பெண்களுக்கு சில இனிமையான அனுபவங்கள் சந்திப்பீர்கள். வெளியூர் பயணம் நன்மை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உடல் நலம் நன்றாக இருக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4