இன்றைய ராசிபலன் (11.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (11.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

இன்று எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய நாள். தொழிலில் போட்டிகள் தோன்றலாம். அவற்றை தவிடுபொடியாக்கலாம். பண விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொறுமையாக நடந்தால் நல்லது. உடல்நலம் சற்று பாதிக்கப்படலாம்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு சாதகமான நாள். தொழிலில் முன்னேற்றம் உறுதி. மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். புதிய திட்டங்கள் வெற்றியடையும்.

மிதுனம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

கடகம்

வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு நிலையானதாக இருக்கும். குடும்பத்தில் மனஸ்தாபம் தோன்றலாம். பொறுமை மிகவும் அவசியம். மற்றபடி பிரிவினை கிடையாது. உடல்நலம் கவனிக்க வேண்டும். மாணவர்கள் முயற்சி அதிகரிக்க வேண்டும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

இன்று உங்களுக்கு நல்ல நாள். தொழிலில் வளர்ச்சி காணலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதிகளுக்கு இனிமையான தருணமாக இருக்கும். புதிய முதலீடுகள் நன்மை தரும். நண்பர்களுடன் நல்ல நேரம் கழிப்பீர்கள். உடல்நலம் சீராக இருக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். பெண்களின் எண்ணம் ஈடேறும். தொழிலில் முன்னேற்றம் மெதுவாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல்நலத்தில் சற்று உஷ்ணம் கூடும். இளநீர், மோர் குடிப்பது நல்லது.

துலாம்

இன்று மனதில் அமைதி குறையக்கூடும். எந்த முடிவும் எடுக்கும் முன் யோசிக்க வேண்டும். தொழிலில் சற்று மந்தநிலை இருக்கும். பண விஷயங்களில் சிக்கனம் அவசியம். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனை பயன் தரும். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பயண வாய்ப்பு உள்ளது. உடல்நலம் நன்றாக இருக்கும். கல்வியில் முன்னேற்றம் காணலாம். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.

தனுசு

தொழிலில் வளர்ச்சி காணலாம். உங்களின் பேச்சுத்திறன் உங்களை உயர்த்தும்.புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு செய்ய ஆரம்பிப்பீர்கள். குடும்பத்தில் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டு. உடல்நலம் சீராக இருக்கும்.

மகரம்

இன்று சற்று சவால்கள் இருந்தாலும் முடிவில் நல்ல பலன் கிடைக்கும். உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு. பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பெரிய பொறுப்புகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதிகளுக்கு நல்ல புரிதல் ஏற்படும்.

கும்பம்

புதிய முயற்சிகளை ஆரம்பிக்க நல்ல நாள். நண்பர்களின் உதவி முக்கியமானதாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. உடல்நலம் சற்று கவனிக்க வேண்டும். மனஅழுத்தம் குறைக்க தியானம் உதவும்.

மீனம்

இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலைகள் முன்னேறும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பணவரவு மெதுவாக இருந்தாலும் நிதானமாக உயர்வடையும். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் அமைதியாக சமாளிப்பீர்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!