பிரித்தானியாவில் காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு

#Death #Lanka4 #baby #England #Girl #Missing
Prasu
1 hour ago
பிரித்தானியாவில் காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு

பிரித்தானியாவின் தெற்கு யார்கூயரில் காணாமல் போன நைலா மே பிராட்ஷா என்ற 7 வயது சிறுமி அவுஸ்டன் பகுதியில் உள்ள பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அப்போது பூங்காவில் இருந்த தடுப்பு வேலியின் இடைவெளி வழியாக வெளியேறி சென்ற நைலா அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் நைலா காணாமல் போனதை அறிந்த உடனே பெற்றோர் உடனடியாக உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

தேடல் பணியின் இறுதியில் காட்டுப்பகுதிக்கு அருகில் இந்த கோல்ப் மைதானத்தின் குட்டைக்குள் நைலா எந்தவொரு அசைவும் இல்லாமல் கிடப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து சிறுமி நைலா உடனடியாக மீட்கப்பட்டு டான்காஸ்டர் ராயல் இன்ஃபர்மரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் இருப்பினும் சிகிச்சை பலனின்றி நைலா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!