இன்றைய ராசிபலன் (09.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (09.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நன்மையான நாள். செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலுவலகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இயந்திர இயக்கத்திலும் வாகனப் பயணத்திலும் எச்சரிக்கை அவசியம். ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் குழப்பமும் பயமும் ஏற்படும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கூடுதல் கவனம் தேவை. உடன் பணிபுரிபவரால் நெருக்கடி தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4: நன்மை அதிகரிக்கும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு மறையும். திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர். உங்களுக்கு குடும்பத்தினர் உதவி புரிவர். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் கவனத்தை அதிகரிப்பீர். வருமானம் திருப்தி தரும். குடும்ப நெருக்கடி நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். பலம் வெளிப்படும். பூசம்: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.

சிம்மம்

மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செயல்களில் குழப்பமும் தடையும் ஏற்படும். வருமானம் இழுபறியாகும். பூரம்: மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர். பிள்ளைகளால் பெருமை அடைவீர். உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவை. செலவிற்கேற்ற வருமானம் வரும்.

கன்னி

உத்திரம் 2, 3, 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். அலைச்சல் ஏற்படும். முயற்சியில் வெற்றி காண்பீர். அஸ்தம்: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். முயற்சி பலிக்கும். சித்திரை 1, 2: தொழில், வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும்.உங்கள் செல்வாக்கு உயரும்.

துலாம்

சித்திரை 3, 4: பெரியோர் ஆதரவால் பெருமையடையும் நாள். நல்லெண்ணம் இன்று நிறைவேறும். நினைத்ததை அடைவீர். சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும். விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.

விருச்சிகம்

விசாகம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பு அதிகரிக்கும். அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கேட்டை: விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.

தனுசு

மூலம்: அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர். பூராடம்: அலட்சிய மனப்பான்மையை விட்டு செயல்படுவதால் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். உத்திராடம் 1: தடைகளைத் தாண்டி திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். தொழிலில் இன்று ஓரளவு லாபம் காண்பீர்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4: வரவு செலவில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். திருவோணம்: புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பதுடன் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். அவிட்டம் 1, 2: திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கும்பம்

அவிட்டம் 3, 4: நினைப்பது நிறைவேறும் நாள். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும். உத்திரட்டாதி: பழைய பிரச்னை முடியும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி: செய்து வரும் தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பணியாளர் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!