இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி

#SriLanka #Flight #Tourist #War #Lanka4 #Tourism #Middle East #L4
Prasu
1 hour ago
இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி

இலங்கையின் சுற்றுலாத்துறை 2026 மார்ச் மாதம் 19.7 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது.

மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த பயணிகள் போர்ச்சூழலால் தமது பயணத்தை ரத்து செய்தனர்.

 இதனால் சுற்றுலாத்துறையில் முதல் காலாண்டில் இலங்கை நிர்ணயித்த இலக்கை அடைய முடியாமல் போயுள்ளது.

images/content-image/1775676574.jpg

வான்வெளி மூடல்கள் மற்றும் விமான ரத்துகளாலேயே இந்நிலை ஏற்பட்டது. 2018 மார்ச் மாதம் இலங்கைக்கு 233,382 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

2025 மார்ச் மாதம் 229,298 பேர் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் இவ்வருடம் மார்ச் மாதம் 183,979 பேரே வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 19.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. 

2026ம் ஆண்டில் இலங்கைக்கு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!