பிரித்தானியாவில் பயிற்சி மருத்துவர்கள் ஆறு நாள் வேலை நிறுத்தம்
#strike
#doctor
#Lanka4
#Salary
#England
#L4
Prasu
2 hours ago
பிரித்தானியாவில் பயிற்சி மருத்துவர்கள் ஆறு நாள் வேலைநிறுத்தத்தைத் இன்று ஆரம்பித்துள்ளனர்.
ஊதிய முரண்பாடு தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசர மற்றும் அதி அவசர சிகிச்சைகள் தொடர்ந்தாலும், தாமதமான சந்திப்புகளால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படும் என சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் மருத்துவ சங்கம், 2026-2027 முதல் சராசரியாக 4.9 சதவிகித அடிப்படை ஊதிய உயர்வை உள்ளடக்கிய அரசாங்கத்தின் சலுகையை நிராகரித்தது.
அதே நேரத்தில், கூடுதலாக 1,000 பயிற்சி இடங்களுக்கான சலுகை கடந்த வாரம் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )