இன்றைய ராசிபலன் (08.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன (வீடியோ இணைப்பு)
மேஷம்
அசுவினி: நினைப்பது நடக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கார்த்திகை 1: தடைபட்ட வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். பயணம் லாபம் தரும். புதிய முயற்சி வேண்டாம்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: அதிகாலையில் சந்திராஷ்டமம் தொடங்கும். எதிலும் கவனம் தேவை. ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி தோன்றும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தினர் எண்ணமறிந்து செயல்படுவீர். முயற்சி பலிக்கும். திருவாதிரை: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். புனர்பூசம் 1,2,3: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.
கடகம்
புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். பயணம் லாபம் தரும். பூசம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். வெளி செல்வாக்கு உயரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். ஆயில்யம்: பொது சேவையில் ஈடுபடுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். இழுபறி விவகாரம் முடியும்.
சிம்மம்
மகம்: உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைக்கும். பூரம்: உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். எடுத்த வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும். உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். நினைப்பதை நடத்தி முடிப்பீர். குடும்பக்குழப்பம் விலகும்.
கன்னி
உத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். பயணம் லாபம் தரும். அஸ்தம்: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் தடைகளும் நெருக்கடியும் நீங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். சித்திரை 1,2: மனக்குழப்பம் விலகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.
துலாம்
சித்திரை 3,4: வருமானத்தால் வளம் காணும் நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். சுவாதி: எடுக்கும் முயற்சி பலிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் இடம் மாறுவர். எடுத்த வேலை நடக்கும்.
விருச்சிகம்
விசாகம் 4: நன்மையான நாள். உங்களை விட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர் மீண்டும் உங்களைத் தேடி வருவர். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் கனவு நனவாகும். கேட்டை: மனக்குழப்பம் விலகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.
தனுசு
மூலம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். பூராடம்: ஒரு சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பர். எந்த நிலையிலும் அமைதியை இழக்க வேண்டாம். உத்திராடம் 1: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி விலகும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும். பணத் தேவை அதிகரிக்கும். திருவோணம்: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வரவு செலவிலும், வாகனப் பயணத்திலும் கவனமாக இருப்பது நல்லது. அவிட்டம் 1,2: உங்கள் வேலை நிலையை உணராமல் குடும்பத்தினர் சங்கடப் படுத்துவார்கள்.
கும்பம்
அவிட்டம் 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். சதயம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: விருப்பம் பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
மீனம்
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மன பயம் விலகும். வருமானம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: நேற்று தள்ளிப்போன வேலை இன்று முடியும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு வரும். ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர். பெரிய மனிதர்கள் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.
https://www.youtube.com/watch?v=dqgj0jjsE7g
(வீடியோ இங்கே )