இன்றைய ராசிபலன் (05.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: மகிழ்ச்சியான நாள். இன்று மாலை வரை நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். பரணி: வழக்கமான வேலைகளில் லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: தடை விலகும் நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். ரோகிணி: வெளியூர் பயணம் ஏற்படும். பிரச்னைக்கு முடிவு காண்பீர். ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடி விலகும். மிருகசீரிடம் 1,2: பிறருக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். விருப்பம் நிறைவேறும். திருவாதிரை: குடும்பத்தில் தோன்றிய பிரச்னை முடியும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புனர்பூசம் 1,2,3: மனம் குழப்பம் அடையும். புத்திசாலித்தனத்தால் நெருக்கடிகளை சமாளிப்பீர். நெருக்கடி வேலையும் முடியும்.
கடகம்
புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். அலைச்சல் அதிகரிக்கும். பூசம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவர். ஆயில்யம்: தொழிலில் போட்டி அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும்.
சிம்மம்
மகம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். மதிப்பு உயரும். பூரம்: எதிர்ப்பினை சந்தித்தாலும் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தின் நுணுக்கங்கள் தெரிந்து கொள்வீர். உத்திரம் 1:வரவேண்டிய பணம் வரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.
கன்னி
உத்திரம் 2,3,4: வருவாய் அதிகரிக்கும் நாள். சொத்துப் பிரச்சனையை பேச்சு வார்த்தை முடிவிற்கு வரும். அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். திறமை வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். சித்திரை 1,2: புதிய வாய்ப்பு தேடிவரும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்.
துலாம்
சித்திரை 3,4: தெளிவுடன் செயல்படும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். மனம் தெளிவாகும். சுவாதி: வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பிறரை நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம். விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்.
விருச்சிகம்
விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். அனுஷம்: ஒருசிலர் உங்களைக் குறைசொல்வர் அதற்கு பதில் சொல்ல வேண்டாம். தேவை நிறைவேறும் நாள். கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். புதிய முதலீட்டையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும்.
தனுசு
மூலம்:லாபமான நாள். வரவேண்டிய பணம் வரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். பூராடம்:எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்திராடம் 1:வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். கையில் பணம் புரளும்.
மகரம்
உத்திராடம் 2,3,4:கனவு நனவாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். திருவோணம்:உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். அவிட்டம் 1,2:செய்துவரும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
கும்பம்
அவிட்டம் 3,4:கவனமாக செயல்பட வேண்டிய நாள். பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். பிறரால் பாராட்டப்படுவீர். சதயம்:வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். நினைத்திருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் திருப்தி தரும். பூரட்டாதி 1,2,3:அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும். எதிர்பார்த்த பணம்வரும். மற்றவர்களுக்காக இன்று உங்களை மாற்றிக் கொள்வீர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
மீனம்
பூரட்டாதி 4:திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.
உத்திரட்டாதி:குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திப்பீர். இன்று மாலைவரை சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதி காப்பது நன்மையாகும்.
ரேவதி:உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் குழப்பமடையும். அவசர வேலைகளிலும் இன்று தடைகளை சந்திப்பீர். வாகனப் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும்.
(வீடியோ இங்கே )