மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

#SriLanka #today #Department #Warning #HeavyRain #ImportantNews #Meteorology #L4
Lakhi
4 months ago
மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

நாட்டில் நிலவும் வளிமண்டலக் குழப்ப நிலை காரணமாக, பல மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வாகன சாரதிகள் நிலச்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுதல் போன்ற அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4