"பெருந்தோட்ட மக்களுக்கு தனி நிவாரணம் வழங்க முடியாது" - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி.

#SriLanka #Minister #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
"பெருந்தோட்ட மக்களுக்கு தனி நிவாரணம் வழங்க முடியாது" - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அதிரடி.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ளதால், பெருந்தோட்ட மக்களுக்கு மாத்திரம் விசேட நிவாரணங்களை வழங்குவது தற்போதைக்கு சாத்தியமற்றது என அந்த அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், தற்போதைய பொருளாதார கஷ்டங்கள் உலகளாவிய ரீதியில் நிலவும் சூழலால் ஏற்பட்டவை. 

இது அத்தியாவசியத் துறைகளில் விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலைமையை நாட்டின் அனைத்து மக்களும் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, பெருந்தோட்ட சமூகத்தை மட்டும் இலக்காகக் கொண்டு விசேட நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அவதிப்படும் நிலையில், அவருடைய கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

அண்மைக்காலமாக எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெருந்தோட்டக் குடும்பங்கள் அன்றாடத் தேவைகளுக்காக அதிகம் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 255 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது அவர்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இலங்கையில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் உள்ளனர்.

நாளாந்த ஊதியத்தை நம்பி வாழும் இவர்களுக்கு, திடீர் விலையேற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் வருமான வசதி இல்லை. பல தோட்டப் பகுதிகளில் வாழ்க்கைச் சூழலும் எளிமையாகவே உள்ளது. 

குடும்பங்கள் தங்களின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க, வரையறுக்கப்பட்ட வளங்களைக் கவனமாக நிர்வகித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4