நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நீர் விநியோகத் தடை!!

#SriLanka #today #water #Country #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நீர் விநியோகத் தடை!!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று(02) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் கட்டமாக பாதுக்கவில் நேற்று (02) இரவு 8.00 மணி முதல் இன்று (03) இரவு 8.00 மணி வரையிலும், ஹோமாகமவில் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரையிலும், நாளை (05) இரவு 8.00 மணி முதல் 6 ஆம் திகதி இரவு 8.00 மணி வரையிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

மேலும், பத்தரமுல்ல, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவலச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, ஒரு நாள் தவிர ஏனைய நாட்களில் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை 3 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் சபை அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4