சமூக வலைத்தள அவதூறு முறைப்பாட்டில் சிக்கினார் - இராமநாதன் அர்ச்சுனா!

#SriLanka #Jaffna #Police #Parliament #CourtOrder #government #Minister #Archuna #L4
Lakhi
4 months ago
சமூக வலைத்தள அவதூறு முறைப்பாட்டில் சிக்கினார் - இராமநாதன் அர்ச்சுனா!

தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு மருத்துவர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் மருத்துவர் ஒருவர், சட்டத்தரணி ஊடாக நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றைய விசாரணையில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவரையும் கட்டாயம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4